ADDED : ஆக 21, 2026 06:44 PM
காட்டுமன்னார்கோவில், ஆக. 22– முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அய்யப்பன் 32; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் மணிகண்டன் 36; இருவருக்கும் வேலி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் இருவர் வீட்டிற்கு நடுவில் அய்யப்பனுக்கு சொந்தமான மரம் உள்ளது. மரம் மணிகண்டன் வீட்டிற்கு இடையூறாக இருப்பதால், வெட்டுவதற்கு ஊர் முக்கியஸ்தர்களிடம் கூறினார். அதற்கு அய்யப்பன் மரத்தை வெட்ட மறுத்ததால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அய்யப்பனை ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.
