/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் வெற்றி
/
லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : ஜன 10, 2026 06:10 AM

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் ஹிந்தி கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றனர்.
கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் தமிழ்நாடு ஹிந்தி பிரசார சபா சார்பில் ஹிந்தி கையெழுத்து போட்டி நடந்தது.
இதில், இப்பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்கள் தேவன், கிர்ஷான், சர்வேஸ்வரன், தர்ஷிகா, தன்யாஸ்ரீ ஆகியோர் முறையே முதல் 5 இடங்களை பிடித்தனர்.
இவர்களுக்கு தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் ஃபத்தாகான், ஹிந்தி ஆசிரியை விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, ஆசிரியர் சித்ரா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா பாராட்டினார்.

