/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறனாய்வு தேர்வில் லால்பேட்டை மாணவர் முதலிடம்
/
திறனாய்வு தேர்வில் லால்பேட்டை மாணவர் முதலிடம்
ADDED : நவ 18, 2024 06:46 AM

காட்டுமன்னார்கோவில் ; திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சக்திபாலனுக்கு பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவ. மாணவிகளுக்கு முதல்வரின் திறனாய்வு தேர்வு கடந்த ஆக., மாதம் நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதில், காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர் சக்திபாலன் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தார்.
மாவட்ட சக்திபாலனை கலெக்டர் சிபி செந்தில்குமார் ஆதித்யா பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் சக்திபாலனுக்கு பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் செயலாளர் மர்ஜிக் பொருளாளர் முபீக் அகமது மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது, தலைமை ஆசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பத்கித்தீன், உயர்நிலைக் குழ அகமது ரியாஜில்லா, மாணவர் தந்தை மகாலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.