/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மறியல் முயற்சி
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மறியல் முயற்சி
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மறியல் முயற்சி
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மறியல் முயற்சி
ADDED : ஜன 29, 2025 07:18 AM

சிதம்பரம் :சிதம்பரம் நகராட்சியோடு லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து லால்புரம் மற்றும் பாலுத்தங்கரை கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று வண்டிகேட் பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அமுதா, சிதம்பரம் நகர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போலீசாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரகாஷ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கூட்டத்தில் 'கிராம மக்கள் லால்புரம் ஊராட்சியில் அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலர் பலர் பயன் பெறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சியை இணைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, நகராட்சியுடன் இணைக்கக் கூடாது' என்றனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பாக தாசில்தார் கூறினார்.

