
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மணக்குள விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார், கூத்தப்பாக்கம் சண்முகா தெரு மணக்குள விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

