ADDED : ஆக 17, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: காட்டுப்பரூர் மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவ மூர்த்தி எழுந்தருளியதும், 108 சுமங்கலி பெண்கள் இணைந்து உலக நன்மை, பருவமழை வேண்டி பெண்கள் சிறப்பு வேள்வி பூஜை நடத்தினர். தொடர்ந்து, பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
