ADDED : ஜன 22, 2026 06:38 AM
விருத்தாசலம்: பு துக்கூரைப்பேட்டையில் அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து விட்டதாக கிராம மக்கள் மனுவின் பேரில், தாசில்தார் நேரில் ஆய் வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள காலி இடத்தில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட சமீபத்தில் சுத்தம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், இடத்தை பட்டா போடப்பட்டு விட்டதாக கூறி, அத்துமீறி யாரும் வரக் கூடாது என கூறியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அரசு நிலத்தை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதன்படி, தாசில்தார் அரவிந்த் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,விடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
