
நெய்வேலி ஜன. 14-: கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதியில், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெய்வேலி தொழிற்பயிற்சி கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு, 124 லேப்டாப்கள், அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு, 219 லேப்டாப்களை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
அவர் பேசுகையில், முதல் கட்டமாக திட்டத்தில் 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன,' என்றார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் தண்டபாணி நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதிகள் ஆடலரசன், ரவிச்சந்திரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், அவைத்தலைவர் நன்மாறப்பாண்டியன், பொருளாளர் மதியழகன், பண்ருட்டி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், பொன்னம்பலம், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் லோகநாதன், கருணாநிதி அப்துல் மஜீத், ரவிச்சந்திரன், திருநாவுக்கரசு, தாமரைச்செல்வன், வீராசாமி, முருகேசன், கருப்பன், செந்தில், காதர் பாஷா, ஆரோக்கியசாமி, பகத்சிங், சத்தியமூர்த்தி, விக்னேஷ், சூர்யா, முகில், குமார் ராஜகோபால் முருகன்,கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

