தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டு மனைப்பட்டா கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

வீட்டு மனைப்பட்டா கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

வீட்டு மனைப்பட்டா கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 21, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 04:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா, குடிமனைப்பட்டா கேட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த பேரளையூர், ஜெ.ஜெ., நகர், வேட்டக்குடி, ராஜேந்திரபட்டிணம், டி.வி.புத்துார், மணக்கொல்லை மேலகாலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

அரசு வழங்கும் கான்கிரீட் வீடுகளுக்கு 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று பகல் 11:30 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டக்குழு மேகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் முருகையன், சுப்ரமணியன், பாலமுருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தாசில்தார் முருகனிடம் மனு கொடுத்துவிட்டு, கலைந்து சென்றனர். சப் இன்ஸ்பெக்டர் காந்தி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us