/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை
/
கடலுாரில் சட்டம், ஒழுங்கு ஐ.ஜி., ஆலோசனை
ADDED : மார் 25, 2025 09:35 PM

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டத்தில், வடக்கு மண்டல ஐ.ஜி., மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பங்கேற்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமை தாங்கி, மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ரவுடி பதிவேட்டில் உள்ளவர்களை கண்காணித்து, அவர்களால் ஏதேனும் பிரச்னை உருவாகலாம் எனத் தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மித்தல் முன்னிலை வகித்தார். எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை மற்றும் டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.