/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இணைப்பு சாலைக்கு அடிக்கல் நாட்டல்
/
இணைப்பு சாலைக்கு அடிக்கல் நாட்டல்
ADDED : மார் 14, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை-காரைக்காடு- புலியூர் இணைப்பு சாலை, ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
கலெக்டர் அருண்தம்புராஜ், கூடுதல் கலெக்டர் சரண்யா, அம்பலவாணன்பேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், அரசு அதிகாரிகள் மற்றும், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

