ADDED : பிப் 23, 2026 03:14 AM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: அரசுப் பள்ளியில் 'கற்றல், வாசித்தல்' நிகழ்ச்சி நடந்தது
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,1 முதல், 5ம் வகுப்பு வரையில் தமிழ், ஆங்கில பாடங்கள் வாசித்தல் மற்றும், கணித அடிப்படை திறன்கள் மதிப்பீடு கற்றல் மதிப்பீடு நிகழ்வு நடந்தது.
மதிப்பீடு ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் பேபி கலந்து கொண்டார்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெயந்தீஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் விண்ணரசி, தலைமை ஆசிரியர் குமார், உதவி ஆசிரியர் திருமாறன், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள் மேற்பார்வையிட்டனர்.
