தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இலவு காத்த கிளியானோமா... புலம்பும் த.வெ.க.,வினர்

இலவு காத்த கிளியானோமா... புலம்பும் த.வெ.க.,வினர்

இலவு காத்த கிளியானோமா... புலம்பும் த.வெ.க.,வினர்


ADDED : ஆக 18, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது  திராவிட கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் இதுவரை எதிர்பார்த்த பதவி மற்றும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் த.வெ.க., விற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

குறிப்பாக அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,விற்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பலரும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டால், எப்படியும் பதவியை பிடித்து விடலாம் என கணக்கு போட்டே அணி மாறி வருகின்றனர்.

எது எப்படியிருந்தாலும், மாற்று கட்சியினர் தங்கள் கட்சிக்கு வருவதால், கட்சி வலுவடைவதோடு, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கணக்கு போட்டு வருகின்றனர்.

ஆனால், த.வெ.க.,வின் உள்ளூர் நிர்வாகிகளோ, ரசிகர் மன்றத்தில் இருந்து எவ்வித பிரதி பலனும் பாராமல், விஜயிற்காக களப்பணியாற்றினோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்ததும், மகிழ்ச்சி அடைந்து, நமக்கும் ஒரு நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணியாற்றினோம். எங்களின் அயராத உழைப்பினால், கட்சி வெற்றி பெற்றதோடு, விஜய் முதல்வராகி விட்டார். அதனால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தோம்.

இந்த நிலையில், மாற்று கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இங்கு வருவதால், உள்ளாட்சி தேர்தல் கனவு அவ்வளவுதானா என்ற ஏக்கம் கட்சியில்  பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் அக்கட்சியின் இளைஞர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

மாற்றுக் கட்சியினரின் படையெடுப்பால் த.வெ.க.விற்கு ஏற்பட்டுள்ள உள்விவகாரம், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் கட்சி தலைமைக்கு பெரும் சவாலாக அமையும் சூழல் உருவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us