ADDED : மார் 24, 2026 11:06 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பொதுநுாலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கிறது
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் கடந்தாண்டு பொதுநுாலக கட்டிடம் பழுதின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது.
அகற்றிய இடத்தில் 2022-23 ஆண்டிற்கான பேரூராட்சி மூலதன நிதி ரூபாய் 22 லட்சம் மதிப்பில் பொது நுாலக புதிய கட்டடம் கடந்த, 6 மாதங்களுக்கு முன் மாதங்களுக்கு கட்டப்பட்டது.
புதிய கட்டடம் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடப்பதால் பாழாகும் அபாய நிலையில் உள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, அதை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
:
