ADDED : பிப் 01, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஆரோக்கியமான வாழ்வியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் தனபால் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எபிநேசர் வரவேற்றார்.
டி.இ.ஓ., துரை பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அரவிந்தராஜ், ஆரோவில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, சென்னை பிரேம்குமார், இயற்கை விவசாய அங்காடி சிவக்குமார் கலந்து கொண்டு ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.