/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை
/
தொழிலாளி கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 01, 2024 01:35 AM

கடலுார்:கடலுார் மாவட்டம், பண்ருட்டி வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், 55. மளிகை மொத்த வியாபாரக் கடையில் வேலை செய்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ல் பணம் வசூலிக்க சென்ற போது, வடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே கொலை செய்யப்பட்டார்.
வடலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சண்முகத்துடன் வேலை செய்த பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த சதாம் உசேன், 35, என்பவரிடம் விசாரித்தனர்.
சதாம் உசேன் தன் கடன் பிரச்னையை தீர்க்க, நண்பர்களுடன் சேர்ந்து சண்முகத்தை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவர் வசூலித்து வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.
சதாம் உசேன், அவரது நண்பர்கள் கல்லுக்குழி வினோத்குமார், 27, ஆண்டிக்குப்பம் அஜித், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், குற்றவாளிகள் சதாம் உசேன், வினோத்குமார், அஜித் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் சதாம் உசேனுக்கு 8,000 ரூபாய், மற்ற இருவருக்கும் தலா 7,000 ரூபாய் அபராதம் விதித்தார்.