/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் பெண்களுக்கு வாழ்வியல் பயிற்சி வகுப்பு
/
புவனகிரியில் பெண்களுக்கு வாழ்வியல் பயிற்சி வகுப்பு
புவனகிரியில் பெண்களுக்கு வாழ்வியல் பயிற்சி வகுப்பு
புவனகிரியில் பெண்களுக்கு வாழ்வியல் பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 23, 2024 12:18 AM

புவனகிரி: புவனகிரி ஸ்வட் தொண்டு நிறுவனம் சார்பில், பெண்களுக்கு மெழுகு வர்த்தி தயாரிப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி வகுப்பு நடந்தது.
புவனகிரியில் மூன்று நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. ஸ்வட் தொண்டு நிறுவன நிர்வாகி வேளாங்கண்ணி தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் விக்டோரியா முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் அமிர்தவள்ளி வரவேற்றார். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த 60 பெண்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு மெழுகு வர்த்தி உற்பத்தி, சந்தை படுத்துதல் குறித்து பயிற்றுனர் சுகாசினி பயிற்சி அளித்தார்.
பயிற்சிக்கு பிறகு, தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மெழுகு வர்த்தி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வழங்கப்படுகிறது.