ADDED : நவ 24, 2026 07:33 PM

பெண்ணாடம்: கார்த்திகை தீபத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் மலைக்கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.
இதையொட்டி, இன்று (நவ.,24) காலை மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வினை தீர்த்த விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணியளவில் மலைக்கோவிலில் உள்ள சவுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் ஏராளமானோர் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.
இதேபோன்று, இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
