ADDED : செப் 04, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
புவனகிரி:
கீரப்பாளையம் நவநீத கிருஷ்ணன் கோவிலில் நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர்களான கண்ணன், ராதை, ருக்மணி மற்றும் ஆஞ்சநேயர், கருடாழ்வார், வினாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை சுவாமி வீதியுலா மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.
