தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இணைப்பு

இணைப்பு

இணைப்பு


ADDED : செப் 04, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் நகராட்சியில் ரூ. 63 கோடியில் குளங்கள்... சோழர் கால நீர் மேலாண்மையால் நிலத்தடி நீர் உயரும் 

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள குளங்களை இணைக்க, ரூ.63 கோடியில் திட்டம் துவங்கப்பட உள்ளதால், நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும்.

சிதம்பரம் நகரப்பகுதிகளில் உள்ள குளங்களை துார் வாரி இணைக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. தமிழகத்திலேயே முன்னோடி திட்டமாக, இக்குளங்களை இணைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதனடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளாக, ஒவ்வொரு குளங்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றி, துார் வாரி சீரமைத்து, குளங்களை சுற்றி நடைபாதை அமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

 இதுவரை பெரியண்ணா குளம், தச்சன்குளம், ஆயிகுளம், தில்லையம்மன் குளம், ஞானபிகாசம் குளம், திருப்பாற்கடல், குமரன் குளம், பாலமான் குளம், ஆயிகுளம் உள்ளிட்ட  11 குளங்கள் ரூ.10 கோடி செலவில் துார் வாரி சுற்றிலும் நடைபாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக சிதம்பரம் நுழைவு வாயிலில் உள்ள பெரியண்ணா குளத்தின் பணி, சிதம்பரம் நகருக்கே அழகு சேர்த்து வருகிறது. தற்போது ஓமக்குளம் துார் வாரி நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் உள்ள 19 குளங்களையம் இணைத்திட ரூ.63 கோடி மதிப்பில் திட்டம் தயாரித்து கடந்த ஆட்சியில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் முன்னோடி திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் மேலும் இளைமையாக்கினார் குளம், வீரனார் குளம், ஆனைமேடு குளம், புளிச்சமேடு, சிப்பி குளம் உள்ளிட்ட 8 குளங்களையும் இணைத்து அதற்கான, சோழர் கால நீர் வழிப்பாதை கண்டறிந்து மீட்டு, புணரமைக்கப்பட உள்ளது.

இந்த நீர் வழிப்பாதைகள், சங்கிலி தொடர்போல், ஒவ்வொரு குளங்களுடன் இணைக்கப்படும். குறிப்பாக, நகராட்சி குயிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திரித்து குளங்களுக்கு செல்லும் வகையில் 13 இடங்களில், இயற்கை முறையில் தண்ணிர் சுத்திகரிப்பு அமைப்பு அமைக்கப்பட உள்ளது.

 இதன் மூலம் மழை காலத்தில், அனைத்து குளங்களிலும் தண்ணீர் தேங்குவது மட்டுமின்றி, நீர் வழிப்பாதை வழியாக, பரவலாக அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வாய்ப்பு உருவாகி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

அனைத்திற்கும் மேலாக குளங்களில் கழிவு நீர் செல்லாத வகையில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் நகர மக்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us