/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லயன்ஸ் சங்க முப்பெரும் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
லயன்ஸ் சங்க முப்பெரும் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
லயன்ஸ் சங்க முப்பெரும் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
லயன்ஸ் சங்க முப்பெரும் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : அக் 05, 2024 05:09 AM

கடலுார் : கடலுார் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தினம், காந்தி ஜெயந்தி, பனை விதை நடுதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, சங்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநில நல்லாசிரியர் விருது பெற்ற வெற்றிச்செல்வி, மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செந்தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகளும், வில்வித்தை, பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
தொடர்ந்து, அழகியநத்தம் கிராமத்தில் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் ரத்தினசபாபதி, நடராஜன், தங்கதுரை, ரங்கநாதன், சண்முகம், கமல்கிேஷார் ஜெயின் வாழ்த்துரை வழங்கினர்.
சங்க செயலாளர் சேதுராமன், பொருளாளர் விஜயன், புருேஷாத்தமன், மனோகரன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சக்திபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.