ADDED : மார் 18, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமை யிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
முருகன்குடி பொதுப்பணித்துறை வாய்க்கால் கரை பகுதியில் கள்ளத்தன மாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, பாசிக்குளம் புதுகாலனியைச் சேர்ந்த செல்வம், 29, என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

