/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பறக்கும் படையிடம் சிக்கிய மதுபாட்டில்கள்
/
பறக்கும் படையிடம் சிக்கிய மதுபாட்டில்கள்
ADDED : மார் 20, 2024 05:09 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை - பில்லுார் இணைப்பு சாலையில், பறக்கும் படை அதிகாரி வெற்றிவேல் தலைமையிலான குழுவினர், அவ்வழியே வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி 88 ஆயிரம் ரொக்கம் மற்றும் கர்நாடக மாநில 48 குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது.
அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர், பெங்களூரு புவனேஸ்வரி நகர், ரவி மகன் சரவணா, 27, என்பதும், அரியலுார் மாவட்டம், குருவாலப்பர் கோவில் பகுதியில் நடக்கும் திருமணத்திற்கு சென்றதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் சரிபார்க்கப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

