/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.50 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் பறிமுதல் புதுச்சேரியில் இருந்து கடத்திய 3 பேர் கைது
/
ரூ.50 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் பறிமுதல் புதுச்சேரியில் இருந்து கடத்திய 3 பேர் கைது
ரூ.50 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் பறிமுதல் புதுச்சேரியில் இருந்து கடத்திய 3 பேர் கைது
ரூ.50 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் பறிமுதல் புதுச்சேரியில் இருந்து கடத்திய 3 பேர் கைது
ADDED : மார் 03, 2024 04:55 AM

கடலுார்: புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார், ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு, கடலுார் கலால் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெம்பர் பிளேட் இல்லாமல் வேகமாக வந்த டி.வி.எஸ் அப்பாச்சி மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
புதுச்சேரி பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த வேல்முருகன் மகன் சுரேஷ்குமார் 30; ஓட்டி வந்த பைக்கில், சாக்கு மூட்டையில் புதுச்சேரி மதுபானங்கள் 90 எம்.எல். கொண்ட 385 பாட்டில்கள் மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது.
அதே போன்று, கடலுார் அடுத்த அழகியநத்தம் செக்போஸ்ட்டில் வாகன சோதனையின்போது, பாகூர் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த முருகன் மகன் சூரியா, 30; என்பவர் ஒட்டி வந்த, நெம்பர் பிளேட் இல்லாத மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், இரு சாக்கு பைகளில் 30 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபானம் 90 எம்.எல் 600 பாட்டில்கள் மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில், கடலுார் அடுத்த கீழ்பூவாணிக்குப்பம் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயபிரதா, 55; என்பவருக்கு விற்பனைக்கு கொடுக்க கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடலுார் கலால் போலீசார் வழக்கு பதிந்து, மதுபானம் கடத்திய சுரேஷ்குமார், 30; சூர்யா, 30; சாராயம் விற்கும் ஜெயபிரதா, 55; ஆகிய 3 பேரை கைது செய்தனர். 50 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

