UPDATED : நவ 28, 2026 05:54 PM
ADDED : நவ 28, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை இந்திரா நகரில், அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார்மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு, டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகுருவை, 58; போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 6 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் ரூ. 450 கைப்பற்றப்பட்டது.
