ADDED : பிப் 06, 2026 06:43 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: கள்ளத்தனமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி காவல் நிலையத்திற்குட்பட்ட ஆழங்காத்தான் மற்றும் தில்லைநாயகபுரம் பகுதியில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை நடப்பதாக குமராட்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஆழங்காத்தான் கன்னி கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கணேஷ் 29; மற்றும் ஆழங்காத்தான் தேவர் தெருவை சேர்ந்த செல்லையன் மகன் ஆனந்தன், 32; ஆகிய இருவரும் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து, கணேஷ் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த குமராட்சி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
