நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தொட்டிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வீரமுத்து, 48, என்பதும், மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.