ADDED : ஏப் 20, 2026 11:16 PM

கடலுார்: கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஜெயக்குமார், மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என, வாகன சோதனை நடத்தினார்.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் இன்று முதல், வரும் 23ம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளான மே 4ம் தேதியும் மதுபான கடைகளை மூட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைப் பகுதியான கடலுார் சாவடி, கொமந்தான்மேடு, வான்பாக்கம், மருதாடு, மேல்பட்டாம்பாக்கம், அழகியந்தம், கண்டரக்கோட்டை என, 8 சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், வாகனங்களை நிறுத்தி மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என, தீவிர சோதனை நடத்தினர்.
