/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு துவக்கம்! கல்வித் துறை அதிகாரிகள் தீவிரம்
/
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு துவக்கம்! கல்வித் துறை அதிகாரிகள் தீவிரம்
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு துவக்கம்! கல்வித் துறை அதிகாரிகள் தீவிரம்
எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்பு துவக்கம்! கல்வித் துறை அதிகாரிகள் தீவிரம்
ADDED : மே 08, 2024 12:21 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேல் எழுத,படிக்க தெரியாதர்வர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கமத்திய அரசு, கடந்த 2022ம் ஆண்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் தமிழகத்தில் 15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாதவர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2024-25ம் கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.
ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் 5,000 பேர்வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி கூறுகை யில், 'கடலுார் மாவட்டத் தில் கடந்த 2023-24ம் கல்வியாண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், எழுத, படிக்க தெரியா தவர்கள் எண்ணிக்கை 19,200 பேர் எனத் தெரிய வந்தது. இவர்களுக்கு அடிப்படை கல்வி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலுாரை 100 சதவீத எழுத்தறிவித்தல் மாவட்டமாக மாற்ற, நடப்பு 2024-25ம் கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எழுத, படிக்க தெரியாதவர்களின் கணக்கெடுப்பு விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவர்களுக்கு ஜூன் மாதம் முதல், மையங்கள் அமைத்து தன்னார்வலர்கள் மூலமாக எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.

