தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எழுத்தறிவுத்திட்ட  தேர்வு  

 எழுத்தறிவுத்திட்ட  தேர்வு  

 எழுத்தறிவுத்திட்ட  தேர்வு  


ADDED : டிச 15, 2025 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட அடிப்படை தேர்வில், 53 பேர் பங்கேற்றனர்.

தமிழக அரசுபள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 15 வயது முதல் 58 வயதுள்ள வரை எழுத, ப டிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு திறனை வளர்க்க கடந்த ஜூலை மாதம் முதல் வகுப்புகள் நடந்தன.

இத்திட்டத்தின் கீழ் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று, நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.

இந்த தேர்வில் பாலுார், சன்னியாசிப்பேட்டையை சேர்ந்த, 8 ஆண்கள்; 45 பெண்கள்; என மொத்தம், 53 பேர் தேர்வு எழுதினர்.

இந்த பணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us