ADDED : ஜூலை 27, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது.
ஆங்கிலத் துறை சார்பில் நடந்த விழாவில், கலைப்புல முதல்வர் அருள் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத் தலைவர் கார்த்திக்குமார் வரவேற்றார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் மார்க்ஸ் 'தற்கால திறனாய்வு பார்வைகளில் இலக்கியம்' என்ற தலைப்பில் பேசினார்.
இலக்கிய மன்ற துணைத் தலைவர் ராஜாராமன் வாழ்த்திப் பேசினார்.
இலக்கியமன்ற செயலாளர் அய்யப்ப ராஜா நன்றி கூறினார்.