ADDED : ஜூலை 07, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் தமிழ்ப் பேரவையின் சார்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பேரவை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ சுந்தரம் பேசினார். 'நடுவில் பிள்ளை' என்ற தலைப்பில் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.