/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை கணக்கெடுப்பு ஆய்வு கூட்டம்
/
கால்நடை கணக்கெடுப்பு ஆய்வு கூட்டம்
ADDED : டிச 29, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: குள்ளஞ்சாவடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை கணக்கெடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறை கடலுார் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் வெங்கடலட்சுமி தலைமை தாங்கினார். கால்நடை கணக்கெடுப்பு பணி முன்னேற்றம் குறித்தும், தேசிய நோய் தடுப்பு திட்டத்தில் ஜனவரி 3ம் தேதி துவங்கும் கோமாரி தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்துவது குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், டாக்டர்கள் நடராஜன், ராஜா, நிக்சன், ஜெய்சித்திரா, மணிகண்டன், நரேந்திரன், மதன்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர்.