/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் லோக் அதாலத் மூலம் ரூ.36 லட்சத்திற்கு கடன் தீர்வு
/
சிதம்பரம் லோக் அதாலத் மூலம் ரூ.36 லட்சத்திற்கு கடன் தீர்வு
சிதம்பரம் லோக் அதாலத் மூலம் ரூ.36 லட்சத்திற்கு கடன் தீர்வு
சிதம்பரம் லோக் அதாலத் மூலம் ரூ.36 லட்சத்திற்கு கடன் தீர்வு
ADDED : டிச 20, 2024 04:28 AM

சிதம்பரம்: சிதம்பரம் கோர்ட் லோக் அதாலத் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வரா கடன், 36 லட்சத்திற்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி உத்தமராஜ் உத்தரவின் பேரில், நேற்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று நீண்ட நாட்கள் செலுத்தாதவர்களுக்கான லோக் அதாலத் முகாம் நடந்தது.
முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, பு.முட்லுார், லால்பேட்டை, மேல் புவனகிரி ஆகிய 6 வங்கிகளில், வீட்டுக் கடன், முத்ரா கடன், தனிநபர் கடன், விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்று திருப்பி செலுத்தாதவர்களுக்கான, கடன் தீர்வு முகாம் நடந்தது.
மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சித்தார்த்தர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சீனிவாசன், சமூக ஆர்வலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் கிளை சீனியர் மேலாளர் அருண் சுந்தர், புதுச்சேரி மண்டல அலுவலர் குமார் பிரசாந்த், கிளை மேலாளர்கள் பழனி குமார், அங்குஷ், அபை, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சட்டப் பணிகள் குழு ஜெகதீசன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் 32 பயனாளிகளின் கடன் தீர்வு ஏற்படுத்தப்பட்டு, 35 லட்சத்து 56 ஆயிரம் தீர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் 15 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம் பெறப்பட்டது.