ADDED : பிப் 04, 2024 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி, லோடுமேன் இறந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 46; லோடு மேனாக வேலை செய்து வந்தார். நேற்று கோவில் குளத்தில் வரலாற்று உற்சவத்தின்போது, குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள், படகு மூலம், குளத்தில் இருந்து வெங்கடேசன் உடலை மீட்டனர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெங்கடேசனுக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.