தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒன்றிய அலுவலக வளாகங்களில் பாழாகும் தளவாட பொருட்கள்

 ஒன்றிய அலுவலக வளாகங்களில் பாழாகும் தளவாட பொருட்கள்

 ஒன்றிய அலுவலக வளாகங்களில் பாழாகும் தளவாட பொருட்கள்


ADDED : ஜன 28, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா வட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம், நல்லுார், மங்களூர் உட்பட 14 ஒன்றியங்களிலும் கலைஞரின் கனவு இல்லம், பிரதமர் வீடு, கழிவறைகள், ஆழ்துளை கிணறுகள் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு பணிகளுக்கும் தகுந்தாற்போல ஒவ்வொரு கட்டமாக நிதி விடுவிக்கப்படுவதுடன், பணிகளுக்கு தேவையான சிமென்ட், இரும்பு கம்பிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இவற்றை, பயனாளிகள் தங்கள் சொந்த செலவில் வாகனங்களில் எடு த்துச் செல்கின்றனர். இதற்காக, ஒன்றிய அலுவலக வளாகத்தில் தளவாடப்பொருட்கள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை மழை, வெயிலில் மாதக்கணக்கில் கிடப்பதால் துருபிடித்து, வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இவற்றை பயனாளிகள் பயன்படுத்தும்போது விரைவில் பாழாகும் நிலை உருவாகிறது. எனவே, ஒன்றிய அலுவலக வளாகங்களில் திறந்தவெளியில் அடுக்கி வைப்பதற்கு பதிலாக ெஷட் அமைத்து, அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us