தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் லோக் அதாலத்

 விருத்தாசலத்தில் லோக் அதாலத்

 விருத்தாசலத்தில் லோக் அதாலத்


ADDED : மார் 15, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்,வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், லோக் அதாலத் நடந்தது.

கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார். முதன்மை மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் (பொறுப்பு) செல்வராஜ் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல்் நீதிபதி அன்னலட்சுமி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சவுபார்னிகா, இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 அரவிந்தன்; குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 அன்பழகன்; ஆகியோர்மூன்று அமர்வாக அமர்ந்து வழக்கை விசாரணை செய்தனர்.

இதில், மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு என 401 வழக்குகளுக்கு 5கோடியே 34 லட்சத்து, 23 ஆயிரத்து 177 ரூபாய் தீர்வு காணப்பட்டது.

இதில், வழக்கறிஞர் சங்க தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us