தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி சிறை பிடிப்பு: கடலுாரில் பரபரப்பு

லாரி சிறை பிடிப்பு: கடலுாரில் பரபரப்பு

லாரி சிறை பிடிப்பு: கடலுாரில் பரபரப்பு


ADDED : செப் 27, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் இருந்து தரம்பிரிக்கும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல முயன்றதை பொதுமக்கள் தடுத்து லாரியை சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாநகராட்சி, கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தரம் பிரிக்கும் ஒப்பந்த பணியை சென்னையைச் சேர்ந்த நியூ ஏஜ் இன்வரால்மெண்டல் சொல்யூஷன் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பணியை துவங்கி 4 மாதங்களில் பணியை முடித்து விட்டது.

மீதம் இருக்கும் குப்பைக்கான ஒப்பந்த பணி வழங்காமல் மாநகராட்சி கால தாமதம் செய்தது.

இதனால், கடந்த 2 மாதங்களாக பணியின்றி தரம் பிரிக்கும் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திரங்களை ஒப்பந்ததாரர் வேறு இடத்திற்கு எடுத்து செல்ல லாரியில் ஏற்றினர்.

இதனையறிந்த கம்மியம்பேட்டை பகுதி மக்கள் மதியம் 1:30 மணியளவில், லாரியை சிறைப்பிடித்து, மற்ற குப்பைகளையும் சுத்தம் செய்த பின்னர் தான் இயந்திரத்தை எடுத்து செல்ல வேண்டும் என தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று, பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இயந்திரங்களை மீண்டும் அங்கேயே வைத்துச் சென்றதைத் தொடர்ந்து, பொதுமக்கள் 2:00 மணியளவில் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us