ADDED : மார் 05, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கூழாங்கற்கள் கடத்திச் சென்ற மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று குருவன்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினிலாரியை சோதனை செய்தனர். அதில், கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
