ADDED : செப் 02, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமம் அருகே ஈச்சர் லாரியும், கூழாங்கல் ஏற்றிசென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். அதில், விபத்துக்குள்ளான லாரி, கூழாங்கற்கள் கடத்திசென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கூழாங்கல் கடத்தி சென்றலாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
