தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


UPDATED : அக் 14, 2026 09:09 PM

ADDED : அக் 14, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:09 PM ADDED : அக் 14, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: மணல் கடத்திய லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் தெய்வஅருள் நேற்று புதுச்சத்திரத்தில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்ற டி.என்.32.கியூ. 6928 பதிவெண் கொண்ட, டிப்பர் லாரியை சோதனை செய்ய நிறுத்தினர். உடன் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் மணலுடன், லாரியை பறிமுதல் செய்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us