/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரவுண்டானாவில் விதிமீறல் கார் மீது லாரி மோதல்
/
ரவுண்டானாவில் விதிமீறல் கார் மீது லாரி மோதல்
ADDED : மார் 30, 2025 04:41 AM
விருத்தாசலம், : பொன்னேரி ரவுண்டானாவில் தாறுமாறாக சென்ற லாரி மோதி, காரில் சென்ற மூதாட்டி காயமடைந்தார்.
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் டி.என்.01 -பி.எஸ்.6395 ஹோண்வா காரில் நேற்று சிதம்பரத்தில் இருந்து சென்னை செல்ல ரவுண்டானாவை கடந்த போது, சேலம் புறவழிச்சாலையில் சென்ற டி.என்.46 -ஒய்.2134 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி, காரின் இடதுபுறம் மோதியது.
அதில், காரின் முன் கண்ணாடி, இடது கதவுகள் சேதமடைந்து. காரில் பயணித்த மூதாட்டி காயமடைந்து மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். , விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி ரவுண்டானாவில், விதிமீறல் வாகனங்களால் விபத்துகள் நிகழ்வதை 'தினமலர்' நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.