ADDED : ஏப் 27, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம்,52; லாரி டிரைவர். இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு, அவரது மனைவி ஜெயா, ஏன் வேலைக்கு செல்லவில்லை என தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாட்சரம், வீட்டின் அருகில் மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.