UPDATED : செப் 08, 2026 03:36 PM
ADDED : செப் 08, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்:எம்.சாண்ட் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் நேற்று முன்தினம் மாலை கடலுார்-பாலுார் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது, எம்.சாண்ட் மண் ஏற்றி வந்த டிஎன்.32 ஏஜே 9916 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன் 3 யூனிட் எம்.சாண்டுடன் லாரியை பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி டிரைவரான வானாரை சேர்ந்த விமல்ராஜை தேடி வருகின்றனர்.
