/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா பாலத்தில் லாரி கவிழ்ந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
/
அண்ணா பாலத்தில் லாரி கவிழ்ந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
அண்ணா பாலத்தில் லாரி கவிழ்ந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
அண்ணா பாலத்தில் லாரி கவிழ்ந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 02, 2024 11:09 PM

கடலுார்: கடலுார் அண்ணா பாலத்தில் ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிய டாரஸ் லாரி வடலுார் நோக்கி சென்றது. வடலுார் அடுத்த ஆபத்தாணபுரத்தை சேர்ந்த சங்கர், 46; என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 5:00 மணியளவில், கடலுார் அண்ணாபாலம் வழியாக வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு கட்டையை உடைத்துக்கொண்டு கவிழ்ந்தது. லாரியின் முன்பகுதி சேதமடைந்துடன், லாரி அந்தரத்தில் தொங்கியது.
தகவலறிந்த கடலுார் புதுநகர்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் சிக்கியிருந்த லாரி ஒட்டிவந்த சங்கரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் போராடி, பகல் 1:00 மணியளவில் லாரி மீட்கப்பட்டது.
பிரதான சாலையில் விபத்து ஏற்பட்டதால், நகரில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு, இம்பிரியல் ரோடு, பாரதி ரோடு மற்றும் கண்ணாரப்பேட்டை ரோடுகளில் நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், அலுவலகம் செல்பவர் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்தனர்.

