/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை
/
ஆன்லைன் தொழிலில் நஷ்டம்; தொழிலதிபர் தற்கொலை
ADDED : மார் 28, 2025 05:31 AM
நெய்வேலி;
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்பாபு, 33; இவரது மனைவி சித்ரா, 30. வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.
வடலுார் ஆபத்தாணபுரத்தில், மனோஜ்பாபு இரும்பு கடை நடத்தி வந்தார். ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. கடனுக்கு பணம் வாங்கியும் தொழிலில் முதலீடு செய்திருந்ததார்.
ஆன்லைன் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அதிகரித்ததால் மனமுடைந்த மனோஜ்பாபு, நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.