ADDED : மார் 08, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில் ஆலிச்சிக்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்தின்பேரில், நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தோப்புத்தெரு சேகர், 64, என்பவரை பிடித்து விசாரித்ததில் லாட்டரி சீட்டுகள் விற்றதை ஒப்புக்கொண்டார்.
புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்தனர்.

