ADDED : மார் 18, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே லாட்டரி சீட் விற்பனை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் புவனகிரி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் புவனகிரி போலீசார் கீரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பைக்கில் வைத்துக் கொண்டு வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த, சிதம்பரம் செங்காட்டன் தெருவைச் சேர்ந்த ராகவன், 43; என்பவரை கைது செய்த போலீசார் பைக், ரொக்கம் ரூ.2 ஆயிரம் மற்றும் கேரள மாநில லாட்டரி சீட்டிற்கான பில் புக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.