/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆகாய தாமரை செடி: குளத்தில் துர்நாற்றம்
/
ஆகாய தாமரை செடி: குளத்தில் துர்நாற்றம்
ADDED : ஆக 02, 2025 07:33 AM

புவனகிரி : வாண்டையான்குப்பத்தில் புதர்மண்டி காணப்படும் குளத்தை துார்வார வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்புவனகிரி ஒன்றியம், வாண்டையான்குப்பத்தில் ஊருக்கு மத்தியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தினர்.
இந்நிலையில், குளம் பராமரிப்பு இல்லாமல் ஆகாயத் தாமரை செடிகள் , கோரை புற்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. எ னவே, குளத்தை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

