தாழ்வாக பறந்த ஜெட் விமானம் விருத்தாசலத்தில் மக்கள் பீதி
தாழ்வாக பறந்த ஜெட் விமானம் விருத்தாசலத்தில் மக்கள் பீதி
ADDED : மார் 14, 2026 04:55 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சிறியரக ஜெட் விமானம் தாழ்வாக பறந்து சென்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் நேற்று காலை 9:15 மணியளவில், சிறிய ரக ஜெட் விமானம், தாழ்வாக பறந்து சென்றது. பயங்கர சப்தத்துடன் குடியிருப்புகளுக்கு மேலே பொது மக்களின் பார்வைக்கு எளிதாக தெரியும் வகையில் விமானம் பறந்து சென்றது.
சப்தம் கேட்ட சிறுவர்கள் உட்பட பலரும் குடியிருப்புகளை விட்டு வெளியே வந்து, சாம்பல் நிறத்தில் பறந்த ஜெட் விமானத்தை ஆவலுடன் பார்த்து ரசித்தனர். 150 அடி தொலைவில் 10 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் இருந்தது. இந்த விமானம் நெய்வேலி மார்க்கமாகவும், பின்னர் தஞ்சாவூர் மார்க்கமாகவும் பறந்து, மறைந்தது.
தஞ்சாவூரில் பயன்பாட்டில் உள்ள விமான நிலையத்தில், ஜெட் உள்ளிட்ட சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இருப்பினும், ஜெட் ரக விமானம் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தாழ்வாக பறந்து சென்றது, இப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
